அனிமல் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
அனிமல் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனிமல் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள்.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
Advertisement
Advertisement
அனிமல் திரைப்படம் 8 நிமிடங்கள் கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் வெளியாகும் என்று சந்தீப் வங்கா நேர்காணல் ஒன்றில் முன்னதாக தெரிவித்து இருந்தார்.
இதையும் படிக்க: ஜிவி பிரகாஷின் ரிபெல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இந்த நிலையில், இப்படம் ஜனவரி 26 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.