FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மெட்ராஸ் மேட்னி படத்தின் வெளியீட்டுத் தேதி!

மெட்ராஸ் மேட்னி படத்தின் வெளியீட்டுத் தேதி தொடர்பாக...

Updated On : 14 ஏப்ரல் 2025, 8:01 pm IST
பகிர்:

சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள மெட்ராஸ் மேட்னி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.

இந்தப் படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷிணி ஹரிப்பிரியன், விஷ்வா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்குகிறது. ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவில், கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், மெட்ராஸ் மேட்னி திரைப்படம் திரையரங்குகளில் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: டென் ஹவர்ஸ் - ஸ்னீக் பீக் விடியோ வெளியீடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments