முகப்பு
செய்திகள்

நிவின் பாலியின் புதிய படம்!

நிவின் பாலி நடிக்கும் புதிய படம்....

Updated On : 14 ஏப்ரல் 2025, 5:01 pm IST
பகிர்:

நடிகர் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றிப்படம் என எதுவும் அமையவில்லை. காரணம், பிரேமம் படத்தில் மிக அழகாகத் தோற்றமளித்த நிவின், அதன்பிறகு மெல்ல மெல்ல அதீத எடைகொண்ட தோற்றத்திற்குச் சென்றார்.

அதே உடலுடன் சில படங்களிலும் நடித்தார். ஆனால், அவை தோல்விப் படங்களாகவே அமைந்தன. இதனால், நிவினின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

Advertisement

தற்போது, உடல் பருமனைக் குறைத்து மெலிதான தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இவர், நயன்தாராவுடன் நடித்த டியர் ஸ்டூடன்ஸ் வெளியீட்டிற்குத் தயாராக இருக்கிறது. தொடர்ந்து, இயக்குநர் ஆதித்யன் சந்திரசேகர் இயக்கும் ’மல்டிவெர்ஸ் மன்மதன்’ என்கிற படத்தில் நிவின் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விஷுவை முன்னிட்டு நிவின் பாலி நடிக்கவுள்ள கிரைம் திரில்லர் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்திற்கு பேபி கேர்ள் எனப் பெயரிட்டுள்ளனர். சுரேஷ் கோபி, பிஜூ மேனன் நடிப்பில் உருவான கருடன் படத்தின் இயக்குநர் அருண் வர்மா இப்படத்தை இயக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.