முகப்பு
செய்திகள்

எம்புரான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

எம்புரான் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக....

Updated On : 17 ஏப்ரல் 2025, 9:19 pm IST
பகிர்:

எம்புரான் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படத்தில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன் உள்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

Advertisement

Advertisement

எம்புரானில் குஜராத் மத கலவரத்தைப் பிரதிபலிப்பதைப்போல காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் வலதுசாரிகள் படத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, எம்புரானில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.

மேலும், இப்படம் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், எம்புரான் திரைப்படம் வரும் ஏப். 24 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சச்சின் திரைப்படம் நாளை மறுவெளியீடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.