முகப்பு
செய்திகள்

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டிரைலர் அப்டேட்!

சமந்தா தயாரித்துள்ள சுபம் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்து...

Updated On : 24 ஏப்ரல் 2025, 4:17 pm IST
சுபம் போஸ்டர், சமந்தா - படங்கள்: இன்ஸ்டா / சமந்தா.
பகிர்:

சுபம் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட்டினை தனது எக்ஸ் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார்.

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்குப் பிறகு அப்பெண்ணுடன் ஏற்படும் நெருக்கடிகளை சந்திக்கும் குடும்பம் என நகைச்சுவையாக (ஹாரர் - காமெடி) இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முதல் இரவுக் காட்சியுடன் தொடங்கும், படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், பலரும் நேர்மறையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

நாயகனாக ஹர்ஷித், நாயகியாக ஷிரியா நடிக்க, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சினிமா பண்டி படத்தை எடுத்து கவனம் ஈர்த்த, எழுத்தாளர் வசந்த் மரிகாண்டி, இயக்குநர் பிரவீன் இணைந்து இப்படத்தை எடுத்துள்ளனர்.

சமந்தா தனது எக்ஸ் பக்கத்தில், “சுபம் டிரைலர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்”எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.