முகப்பு
செய்திகள்

தி வெர்டிக்ட் ரிலீஸ் தேதி!

நடிகை வரலட்சுமி நடித்துள்ள தி வெர்டிக்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஏப்ரல் 2025, 5:58 pm IST
தி வெர்டிக்ட் போஸ்டர். - படம்: எக்ஸ் / வரலட்சுமி சரத்குமார்.
பகிர்:

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள தி வெர்டிக்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி படத்தில் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் திருமணம் செய்த நடிகை நடிகை வரலட்சுமியின் நடிப்பில் வெளியான மதகஜராஜா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

Advertisement

Advertisement

தற்போது, அக்னி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிருஷ்ணா சங்கர் ‛தி வெர்டிக்ட்' எனும் படத்தினை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஷ்ருதி ஹரிஹரன், சுகாஷினி, வித்யுலேகா ராமன், பிரகாஷ் மோகன்தாஸ் எனப் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை நடிகர் சரத்குமார் வெளியிட்டிருந்தார்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணா சங்கர், “ஒரு பணக்கார அமெரிக்க பெண் கொலை செய்யப்படுகிறாள். அவளுடன் நட்பு பாராட்டி வந்த இன்னொரு பெண் அந்தக் கொலை வழக்கில் சிக்கிக் கொள்கிறாள். அவளது கணவர் சிக்கலில் மாட்டியுள்ள தன் மனைவியை மீட்கப் போராடுகிறார்” எனக் கூறினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அமெரிக்காவிலேயே நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்தப்படம் வரும் மே.30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments