10 கோடி பார்வைகளைக் கடந்த மோனிகா பாடல்!
யூடியூபில் மோனிகா பாடல் வைரல் ஹிட்...
கூலியில் இடம்பெற்ற மோனிகா பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘மோனிகா’ பாடல் ஒரு மாதத்திற்கு முன் வெளியானபோதே ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் ரீல்ஸ்களால் வைரலானது.
திரையரங்க வெளியீட்டிலும் இப்பாடலுக்கு பூஜா ஹெக்டே மற்றும் சௌபின் சாஹிரின் நடனம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில்,மோனிகா பாடல் யூடியூபில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.
அனிருத் இசையமைப்பில் விஷ்ணு எடவன் எழுதிய இப்பாடலை சுப்லாஷ்னி, அனிருத் பாடியிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.