நடிகரானார் டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்!
இயக்குநர் அபிஷன் ஜீவிந் நடிகரானது குறித்து...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூர்யா, நானி, இயக்குநர் ராஜமௌலி என பலரும் பாராட்டினார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் படம் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது.
இந்நிலையில், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் இவர் சத்யா எனும் கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார்.
மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக மோனிஷா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதை யார் இயக்குகிறார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tourist Family director Abhishan Jeevinth has made his debut as a hero.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.