FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தர்மன் படத்தில் ரஜினி - அஸ்வத் மாரிமுத்துக்கு கருத்து வேறுபாடு?

நடிகர் ரஜினிக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கும் இடையேயான பிரச்னை குறித்து...

9 அக்டோபர் 2026, 2:52 pm IST
ரஜினிகாந்த், அஸ்வத் மாரிமுத்து - படங்கள்: எக்ஸ் / ஆர்கேஎஃப்ஐ, அஸ்வத் மாரிமுத்து.
பகிர்:

நடிகர் ரஜினிக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கும் இடையேயான பிரச்னை என்று பரவி வரும் செய்திகளில் உண்மை இல்லையென ரஜினியின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் 173 ஆவது படம் “தர்மன்”. நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, டியூட் திரைப்பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.

தொடக்கத்தில் இந்தப் படத்தை யார் இயக்குவது என்று பல பிரச்னைகள் வந்தன. சுந்தர் சி முதலில் விலக, பின்னர் சிபி சக்ரவர்த்தியும் ஒப்பந்தமாகி விலகினார். கடைசியாக அஸ்வத் மாரிமுத்து ஒப்பந்தமானார்.

Advertisement

Advertisement

கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கிய தர்மன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக, கடந்த செப். 4 அன்று படக்குழு சிறப்பு விடியோ வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், படத்தின் இயக்குநருக்கும் நடிகர் ரஜினிக்கும் கருத்து வேறுபாடு என தகவல்கள் வெளியாகின. இதற்கு ரஜினியின் தகவல் தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இது முற்றிலும் தவறான தகவல் . இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அவர்களின் விறுவிறுப்பான முறையில் பணியாற்றுவது தலைவருக்கு மிகவும் படபிடிப்பு தளத்தில் சௌரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை நானே பல நாள்கள் படப்பிடிப்பில் பார்த்திருக்கிறேன். தர்மன் படம் நன்றாகவும் வேகமாகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறது எனக் கூறியுள்ளார்.

summary

Rajinikanth and Dharman director Ashwath Marimuthu at odds? Here's the truth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments