இயக்குநருக்கு ஐபோன் பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்!
இயக்குநருக்கு ஐபோன் வாங்கிக்கொடுத்த சிவகார்த்திகேயன்...
நடிகர் சிவகார்த்திகேயன் தன் திரைப்பட இயக்குநர் ஐபோன் பரிசளித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மதுரையைப் பின்னணியாக வைத்து உருவாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இவர் பார்க்கிங் திரைப்படத்தை இயக்கி பெரிய அளவில் கவனிக்கப்பட்டவர். இக்கதையில் முதலில் நடிகர் சிலம்பரசன் நடிக்க இருந்தார். ஆனால், சில காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து விலக, சிவகார்த்திகேயன் இணைந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ஐபோன் ரக செல்போனை பரிசளித்துள்ளார். இதனைப் பகிர்ந்த ராம்குமார், “பரிசுக்கு நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா..” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Sivakarthikeyan has gifted an iPhone to his film director.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.