மம்மூட்டியின் களம்காவல் படத்தை வியந்து பாராட்டிய தி கேர்ள்பிரண்ட் இயக்குநர்!
மம்மூட்டியின் திரைப்படம் குறித்து இயக்குநர் ராகுல் ரவீந்திரன் கூறியதாவது...
இயக்குநர் ராகுல் ரவீந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் மம்மூட்டியின் களம்காவல் திரைப்படம் குறித்து பாராட்டி பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கிய தி கேர்ள்பிரண்ட் என்ற திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மமூட்டி கம்பெனி தயாரிப்பில் களம்காவல் எனும் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் கே. ஜோஸ் இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் விநாயகன், மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகைகள் பலர் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
இந்தப் படம் நேற்று (டிச.5) திரையரங்குகளில் வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தப் படம் குறித்து இயக்குநர் ராகுல் ரவீந்திரன் கூறியதாவது:
மம்மூட்டி சார்...எப்படி சார்... என்ன சார்... ஏன் சார் 🙏🏾🙏🏾🙏🏾🙌🏽🙌🏽🙌🏽🙌🏽. என்ன ஒரு மனிதன்... என்ன ஒரு நடிகர்.... என்ன ஒரு நட்சத்திரம்... என்ன ஒரு தயாரிப்பாளர்! களம்காவல் ஒரு அற்புதம்! இந்தப் படத்தில் மூழ்கிவிட்டேன் எனக் கூறியுள்ளார்.
Director Rahul Ravindran has posted a post praising Mammootty's film Kalamkaval on his X page.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.