களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!
நடிகர் மம்மூட்டியின் களம்காவல் படத்தின் முதல்நாள் வசூல் குறித்து...
நடிகர் மமூட்டியின் களம்காவல் படத்தின் முதல்நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் களம்காவல் எனும் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் கே. ஜோஸ் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் உலகம் முழுவதும் டிச.5ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் விநாயகன், மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், இதில் பல நடிகைகள் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. முதல்நாளில் உலகம் முழுவதும் இந்தப் படம் ரூ.15.7 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படம் மம்மூட்டியின் ரூ.100 கோடி வசூலித்த படமாக மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
The first day collection details of actor Mammootty's film Kalamkaval have been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.