FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

4 நாள்களில் அசலை முந்திய ரீமேக்..! ரூ.300 கோடி வசூலித்த த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்!

நடிகர் அஜய் தேவ்கனின் நடிப்பில் வெளியாகியுள்ள த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன் படத்தின் வசூல் குறித்து...

12 வினாடிகள் முன்பு
த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன் படத்தின் காட்சிகள். - படங்கள்: எக்ஸ் / ஸ்டார் ஸ்டுடியோ 18
பகிர்:

நடிகர் அஜய் தேவ்கனின் நடிப்பில் வெளியாகியுள்ள ’த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ திரைப்படத்தின் வசூல் ரூ.300 கோடியை தாண்டியுள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியான த்ரிஷயம் 3 படத்தின் மொத்த வசூலை நான்கே நாள்களில் ஹிந்தியில் வெளியான த்ரிஷ்யம் தி கன்க்ளூஷன் முறியடித்துள்ளது.

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் படம் வெளியாகி வரவேற்பை பெற்று பான் இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் மூன்றாவது பாகம் கடந்த மே 21ஆம் தேதி வெளியானது.

Advertisement

Advertisement

இந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருப்பினும் உலகம் முழுவதும் ரூ. 237 கோடி வசூலித்தது. இந்தப் படம் ஜூன் 18 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் ஹிந்தியில் ’த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ என்ற படம் அக்.2ஆம் தேதி வெளியானது. அபிஷேக் பதாக் இயக்கிய இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், தபு, ஷ்ரேயா சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தை பனோரமா ஸ்டுடியோஸ், ஸ்டார் ஸ்டுடியோ 18 தயாரித்துள்ளது. நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தப் படம் நான்கு நாள்களில் ரூ.303 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.237 கோடி வசூலித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

ஒரிஜனலை விட ரீமேக்கில் அதிக வசூல் ஈட்டியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. ஹிந்தி படத்துக்கான மார்கெட் பெரியதெனவும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

summary

'Drishyam: The Conclusion' goes past Rs 300 crore mark at worldwide box office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments