FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சாதனை வசூல் நோக்கி ராமாயணா! 11 நாள்களில் எவ்வளவு?

ராமாயணா திரைப்படத்தின் இரண்டாவது வார வசூல் விவரம் பற்றி...

16 வினாடிகள் முன்பு
ராமாயணா - x
பகிர்:

நிதீஷ் திவாரி இயக்கத்தில் வெளியான ராமாயணா முதல் பாகத்தின் முதல் 11 நாள் வசூல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரவி துபே, சன்னி தியோல் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகிய ராமாயணா படம் தீபாவளி வெளியீடாக நவ. 5ஆம் தேதி திரைக்கு வந்தது.

Advertisement

Advertisement

இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முக்கியமாக கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகின்றன.

ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் உருவான ராமாயணா வெளியான முதல் 8 நாள்களிலேயே ரூ. 1,000 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், இரண்டாவது வார விடுமுறை நாள்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ராமாயணாவின் முதல் 11 நாள்கள் வசூல் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, உலகம் முழுவதும் முதல் 11 நாள்களில் ரூ. 1,404 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டில் அதிகம் வசூலித்த துரந்தர் 2 திரைப்படம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை திரையரங்குகளில் ரூ. 68.1 கோடி வசூலித்திருந்த நிலையில், அந்த சாதனையை முறியடித்து ராமாயணா திரைப்படம் ரூ. 75 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தாண்டில் அதிகம் வசூலித்த துரந்தர் 2 (ரூ. 1,813 கோடி) படத்தின் வசூலை ராமாயணா முதல் பாகம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

summary

Ramayana heading towards record-breaking box office collections! How much did it earn in its second week?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.