தெய்வீக வெற்றி...ரூ. 1000 கோடி வசூலை நெருங்கும் ராமாயணா!
நிதீஷ் திவாரி இயக்கத்தில் வெளியான ராமாயணா முதல் பாகத்தின் வசூல் குறித்து...
நிதீஷ் திவாரி இயக்கத்தில் வெளியான ராமாயணா முதல் பாகத்தின் வசூல் உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகிய ராமாயணா படம் தீபாவளி வெளியீடாக நவ.5ஆம் தேதி திரைக்கு வந்தது.
Advertisement
Advertisement
இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முக்கியமாக கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் மட்டுமே ரூ.511 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம் உலக அளவில் ரூ. 964 கோடி வசூலித்துள்ளது.
விடுமுறை அல்லாத நாளில் வெளியாகி அதிக வசூலித்த படமாக ஏற்கெனவே வரலாற்றுச் சாதனை படைத்திருந்தது. தற்போது, 1000 கோடியை நோக்கி சென்று வருகிறது.
இந்தப் படம் ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் உருவானதாக தகவல்கள் வெளியாகின. இதனை நமீத் மல்ஹோத்ரா தயாரிக்க, சோனி பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிட்டது.