FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரூ. 500 கோடி வசூலித்த ஹிந்தி த்ரிஷ்யம் - 3!

த்ரிஷ்யம் - 3 திரைப்பட வசூல் குறித்து...

14 அக்டோபர் 2026, 2:31 pm IST
பகிர்:

ஹிந்தியில் உருவான த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாகியுள்ளது.

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் படம் வெளியாகி வரவேற்பை பெற்று பான் இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் மூன்றாவது பாகம் கடந்த மே 21ஆம் தேதி வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. இருப்பினும் உலகம் முழுவதும் ரூ. 250 கோடி வரை வசூலித்தது.

தொடர்ந்து, ’த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ என்ற பெயரில் ஹிந்தி ரீமேக் திரைப்படம் அக். 2ஆம் தேதி வெளியானது. அபிஷேக் பதாக் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர்கள் அஜய் தேவ்கன், தபு, ஷ்ரேயா சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Advertisement

Advertisement

ஆச்சரியமாக, ஹிந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இத்திரைப்படம் இதுவரை ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள ஒரிஜினல் திரைப்படத்தைவிட ரீமேக் வடிவமான ஹிந்தித் திரைப்படம் மிகப்பெரிய தொகையை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The Hindi film Drishyam: The Conclusion has become a massive success.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments