வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?
நடிகை ஆண்ட்ரியா பகிர்ந்த வடசென்னை புகைப்படம் குறித்து...
நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதனால் அவர் அரசன் படத்திலும் இருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்துவருகிறது.
வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018-இல் வடசென்னை திரைப்படம் வெளியாகியது.
Advertisement
Advertisement
மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா சந்திரா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, வடசென்னை உலகில் சிம்புவை வைத்து வெற்றி மாறன் அரசன் எனும் படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில், ஆண்ட்ரியா பகிர்ந்த புகைப்படத்தினால் அரசன் படத்திலும் இவர் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் கிளப்பி வருகிறது.
Actress Andrea Jeremiah has shared a picture of her character from the movie 'Vada Chennai'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.