FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தீபாவளி அன்று திரைகளில்... அரசன் படத்தின் புதிய அப்டேட் சொன்ன சிம்பு!

அரசன் படத்தின் வெளியீடு பற்றி நடிகர் சிம்பு புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.

4 செப்டம்பர் 2026, 3:39 pm IST
வெற்றிமாறன் உடன் சிலம்பரசன்
பகிர்:

அரசன் படத்தின் வெளியீடு பற்றி நடிகர் சிலம்பரசன் புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.

தமிழின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் அரசன். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், அனிருத் இசையில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் அறிவிப்பு விடியோ வெளியானது முதலே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

மேலும், வடசென்னை பட உலகில் இப்படத்தின் கதையும் நிகழ்வதால் படவெளியீட்டிற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

அரசன் படத்துடன் கென் கருணாஸ் நடிப்பில் ’ராஜன் வகையறா’ படத்தின் படப்பிடிப்பையும் வெற்றிமாறன் ஒரே நேரத்தில் நடத்தி வருவதால் அரசன் படப்பிடிப்பு அவ்வப்போது இடைவேளை விட்டு எடுக்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக அரசன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதங்களால் பொங்கலன்று வெளியாகும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்றை நடிகர் சிம்பு ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசுகையில் அறிவித்தார்.

அதில், “நான் வெற்றிமாறன் சாரிடம் வற்புறுத்திக் கேட்டேன். படம் எடுக்க நீங்கள் நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள். லேட்டாக தான் படம் வரப்போகிறது. பொங்கலுக்கும் படம் வெளியாகாது என சொல்லிவிட்டீர்கள். என்னுடைய ரசிகர்களை என்னால் காக்க வைக்க முடியாது. ரொம்ப நாளாக காத்திருக்கிறார்கள். அதனால், படப்பிடிப்புக்கு முன்னதாக திரையரங்குகளில் ஒரு ப்ரோமோ வெளியிட்டதைப் போன்று, இதுவரை நடத்திய படப்பிடிப்பை ‘வேர்ல்ட் ஆஃப் அரசன்’ (World of Arasan) என்ற பெயரில் ஒரு பிரத்யேகமான ப்ரோமோவாக தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியிடவுள்ளோம். அனைவரும் தீபாவளிக்கு திரையரங்கிற்கு வந்து பாருங்கள்” என்றார்.

தீபாவளிக்கு அரசன் படத்தின் ப்ரோமோ திரையரங்குகளில் வெளியாவதாக சிம்பு அறிவித்த நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

summary

Silambarasan has given a new update about the release of the film Arasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments