FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மண்ணின் மணத்தோடு ஒரு சுவாரஸ்யமான படைப்பு! - மொத ராத்திரி படத்தைப் பாராட்டிய சிம்பு!

மொத ராத்திரி திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் பாராட்டியுள்ளார்...

மொத ராத்திரி திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் பாராட்டு
பகிர்:

நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா நடிப்பில் வெளியான “மொத ராத்திரி” திரைப்படத்தை நடிகர் சிலம்பரசன் பாராட்டியுள்ளார்.

நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக நடித்து, அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகி வெளியான புதிய படம் “மொத ராத்திரி”.

புதிதாகத் திருமணமான ஜோடியின் முதலிரவில் நடக்கும் நகைச்சுவையான கதைகளத்துடன் உருவான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மண்ணின் மணத்தோடு கூடிய ஒரு சுவாரஸ்யமான படைப்பு எனக் கூறி மொத ராத்திரி படத்தை நடிகர் சிலம்பரசன் இன்று (ஆக. 28) பாராட்டியுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,

“மொத ராத்திரி படத்தைப் பார்த்தேன், மிகவும் ரசித்தேன்.

பிற மொழிகளில் வெளியாகும் சிறிய, அழகான படங்களைக் கண்டறிந்து நாம் கொண்டாடுகிறோம். அதேபோல, ஒரு புதிய குழுவுடன் புதிய முயற்சியாக ஒரு தமிழ்ப் படம் வெளியாகையில் அதற்கும் நாம் அதே அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

ஒரு கிராமத்துத் திருமணப் பின்னணியைக் கொண்டு, ஒரே இரவில் நடக்கும் கதை. இதில் வரும் பல கதாபாத்திரங்களும், சிறிய தருணங்களும் மிகவும் இயல்பானவையாக அமைந்திருக்கின்றன. கதைகளம், நகைச்சுவை, மனிதர்கள் இடையேயான உரையாடல்கள் மற்றும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு என அனைத்தும் மிகவும் சிறப்பாகக் கையாளப்பட்டிருந்தன.

ஒரு புதிய இயக்குநரும் அவரின் குழுவும், மண்ணின் மணத்தோடு கூடிய சுவாரஸ்யமான ஒரு படைப்பை உருவாக்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் ராஜா கருப்பசாமி, நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்; இவர்களுடன், இப்படத்துக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

என் ரசிகர்கள் மற்றும் சினிமாவை விரும்புபவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்; மொத ராத்திரி திரைப்படத்தைத் திரையரங்குகளில் சென்று பார்த்து, அக்குழுவுக்கு ஆதரவு அளியுங்கள்.

முழு படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்குங்கள்” எனக் கூறியுள்ளார்.

summary

Actor Silambarasan has praised the film "Modha Rathiri," starring Rishikanth and Anishma.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments