மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!
அஜித்குமாரின் மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என ரசிகர்கள் ஆவல்
நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தின் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்களின் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தை இயக்கிய இயக்குநர் வெங்கட் பிரபு, தனது எக்ஸ் பக்கத்தில் தி கிங்மேக்கர் என்று பதிவிட்டுள்ளார். மங்காத்தா படத்தில் ஒரு வசனத்தில் கிங்மேக்கர் வார்த்தை இடம்பெற்றிருக்கும்.
இந்த நிலையில், வெங்கட் பிரபுவின் கிங் மேக்கர் பதிவு, ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. இதனையடுத்து, மங்காத்தா படத்தின் மறுவெளியீடு குறித்துதான் வெங்கட் பிரபு சிக்னல் தருவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, சமூக ஊடகங்களில் மங்காத்தா ரீ-ரிலீஸ் பதிவுகளை ரசிகர்கள் பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர். இருப்பினும், மங்காத்தா மறுவெளியீடு குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதுவரையில் எதுவும் பெறப்படவில்லை.
இதையும் படிக்க: ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!
Ajithkumar's Mankatha re-release very soon
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.