முகப்பு
செய்திகள்

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் வசூல் குறித்து...

Updated On : 20 டிசம்பர் 2025, 4:42 pm IST
அவதார்
பகிர்:

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவான அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் நேற்று (டிச. 19) உலகளவில் 2டி, 3டி வடிவில் பல ஆயிரம் திரைகளில் வெளியானது.

இது அவதாரின் இறுதிப்பாகமாக இருக்கலாம் என்பதால் உலகம முழுவதும் இதற்கான ரசிகர்கள் காத்திருந்திருந்தனர். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் காட்சியனுபவமாக அட்டகாசமாக இருப்பதாகவும் கருத்துகள் வெளியாகின.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் முதல்நாள் வசூலாக இந்தியாவில் ரூ. 20 கோடியையும் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்நாள் வசூலாக இதுவே அதிகம் வசூலித்த திரைப்படமாக இருக்கும் என்பதால் வசூலிலும் சில ஆயிரம் கோடிகளை ஈட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.