முகப்பு
செய்திகள்

திரையரங்குகளில் வெளியாகும் அஜித் குமார் ரேசிங் ஆவணப்படம்?

ஏகே ரேசிங் ஆவணப்படம் குறித்து...

Updated On : 30 டிசம்பர் 2025, 11:19 am IST
பகிர்:

நடிகர் அஜித் குமார் ரேசிங் ஆவணப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அஜித் குமார் சினிமாவை தாண்டி தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். சில போட்டிகளில் கலந்துகொண்டு சொல்லதக்க வெற்றிகளையும் ஈட்டியுள்ளார்.

அண்மையில், மலேசியாவில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் தன் குழுவினருடன் கலந்துகொண்டார். இதற்கிடையே, பிலிப் சாரியட் மோட்டார்ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

தற்போது, நடிகர் அஜித் குமார் ரேசிங் பயணம் ஆவணப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி இந்த ஆவணப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.