மம்மூட்டி - மோகன்லால் படத்தில் நயன்தாரா!
மம்மூட்டி - மோகன்லால் படத்தில் இணைந்தார் நயன்தாரா...
மம்மூட்டி - மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார்.
மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். தங்களின் படங்களை இவர்களே தயாரித்தும் வெளியிடுகின்றனர்.
தற்போது, மம்மூட்டி அவரின் தயாரிப்பிலேயே ஒரு படத்தில் நடித்து வருகிறார். விநாயகன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மம்மூட்டி வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
அதேபோல், நடிகர் மோகன்லால் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் எம்புரான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை மோகன்லாலின் ஆஷிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படிக்க: மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!
இந்த நிலையில், ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களின் இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கத்தில் நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது, இப்படத்தில் நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளார். நாயகியாக நடிக்கிறாரா இல்லை முக்கிய கதாபாத்திரமா என விரைவில் தெரிய வரும்.