முகப்பு
செய்திகள்

நிறம் மாறும் உலகில்... டிரைலர் வெளியானது!

‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 19 பிப்ரவரி 2025, 10:07 pm IST
நிறம் மாறும் உலகில்
பகிர்:

பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி இணைந்து நடித்துள்ள படம் ’நிறம் மாறும் உலகில்'. இந்தப் படத்தில் யோகிபாபு, கனிகா, வடிவுக்கரசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிக்னேச்சர் புரடக்சன்ஸ், ஜிஎஸ் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். தேவ் பிரகாஷ் ரேகன் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தைப் பேசும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முதல் பாடலான ’ரங்கம்மா’ கடந்த வாரம் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், நிறம் மாறும் உலகில் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படம் மார்ச் 7 அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.