டிராகன் எதிர்பாராத வசூல்!
டிராகன் வசூல் குறித்து....
பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
கல்லூரியில் படிப்பில் கவனம் செலுத்தாத மாணவன் டிராகன் (பிரதீப் ரங்கநாதன்) தொழில் வாழ்க்கைக்காக என்னென்ன வேலைகள் செய்கிறார் என்பதை சுவாரஸ்யமான முறையில் காட்சிப்படுத்தியதற்காக இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இப்படியுமா மட்டம் தட்டுவது?
வணிக ரீதியாகவும் இப்படம் பெரிய வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆச்சரியமாக படம் வெளியான முதல் மூன்று நாள்களிலேயே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அலுவலக நாளான இன்றுகூட பல திரைகளில் இப்படம் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளதால் இந்த வார இறுதிக்குள் ரூ. 100 கோடிக்கும் அதிகமாகவே வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.