செய்திகள்

காதலிக்க நேரமில்லை: ரிலீஸ் தேதி!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உருவான திரைப்படம் "காதலிக்க நேரமில்லை".

ஜெயம் ரவி, நித்யா மெனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முழுக்காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இது, டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்படத்தின் முதல் பாடலான ‘என்னை இழுக்குதடி’ பாடல் நவ.22இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

யூடியூப்பில் மட்டும் இந்தப் பாடல் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் படம் ஜன.14ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு! கீர்த்தி சுரேஷ்

பாண்லே நெய், பன்னீா் விலை உயா்வு: புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

நீதிக் கட்சியின் நீட்சியே திராவிட மாடல் ஆட்சி! முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 15 இடங்களில் விடிய, விடிய நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை நிறைவு

SCROLL FOR NEXT