2கே லவ் ஸ்டோரி டிரைலர்!
2கே லவ் ஸ்டோரி டிரைலர் வெளியானது...
சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நவீன இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி'.
புதுமுக நாயகனாக ஜெகவீர் நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: 800 திரைகளில் விடாமுயற்சி?
இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர்கள் விஷ்ணு விஷால், சூரி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.