FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நடிகர் விஜய்க்கு 3 கதைகள் சொன்னேன்: மகிழ் திருமேனி

நடிகர் விஜய் உடனான அனுபவங்களை மகிழ் திருமேனி பகிர்ந்துள்ளார்...

Updated On : 27 ஜனவரி 2025, 1:47 pm IST
பகிர்:

நடிகர் விஜய்யிடம் மூன்று கதைகளைச் சொல்லி இயக்கத் தயாராக இருந்ததாக இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படம் பிப். 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வர வேண்டிய படமென்பதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தற்போது, படத்திற்கான புரமோஷன் நேர்காணல்களில் இயக்குநர் மகிழ் திருமேனி கலந்துகொண்டு பேசி வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய மகிழ் திருமேனி, “தடம் படத்திற்குப் பின் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தேன். அவருக்காக 3 கதைகளைச் சொன்னேன். மூன்றையும் கேட்டுவிட்டு விஜய், ‘மகிழ் நீங்கள் என்னை மிகவும் குழப்பிவிட்டீர்கள். மூன்றுமே எனக்குப் பிடித்திருக்கிறது. எதை தேர்ந்தெடுக்கலாம் என நீங்களே சொல்லுங்கள்’ என்றார். அப்படி, அவருக்கான கதையாகவே அக்கதைகள் இருந்தன.

ஆனால், உடனடியாக இயக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. பின், மற்றொரு சந்திப்பில், ‘என்ன ஆச்சு மகிழ்’ எனக் கேட்டார். இருவருக்கும் அடுத்தடுத்த படங்கள் இருந்ததால் இணைய முடியவில்லை. இப்போதும், அவர் அக்கதையில் நடித்தால் மாஸ் ஹீரோவுக்கான படமாகவே இருக்கும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments