பத்திக்கிச்சு..! விடாமுயற்சி பாடல் பாணியில் அஜித்தின் ரேஸிங் விடியோ!
விடாமுயற்சி பாடல் பாணியில் அஜித்தின் ரேஸிங் விடியோ வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி பாடல் பாணியில் அஜித்தின் ரேஸிங் விடியோவை சோனி முயூசிக் சௌத் இந்தியா வெளியிட்டுள்ளது.
விடாமுயற்சி படம் நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்தன. முதலில் பொங்கலுக்கு வரவிருந்தது. பின்னர், ஒத்திவைக்கப்பட்டது. அதனால் 9 சிறிய பட்ஜெட் படங்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி படத்தின் டிரைலர், பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பிப்.6ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தில் இருந்து வெளியான பத்திக்கிச்சு எனும் பாடல் மிகவும் கவனம் ஈர்த்துள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்களில் இந்தப் பாடல் அசத்தி வருகிறது.
இந்த நிலையில் அஜித்தின் ரேஸிங் விடியோக்களை இணைத்து விடியோவாக சோனி முயூசிக் சௌத் இந்தியா வெளியிட்டுள்ளது.
பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளியாகாவிட்டால் என்ன நம் படம் வெளியாகும் நாள்தான் பண்டிகை என நடிகர் அஜித் குமார் நம்பிக்கையோடு பேசியதாக இயக்குநர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.