முகப்பு
செய்திகள்

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்து...

Updated On : 4 ஜூலை 2025, 2:47 pm IST
சிவகார்த்திகேயன்
பகிர்:

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களை அடுத்தடுத்த வெளியீடாக வைத்திருக்கிறார். தொடர்ந்து, குட் நைட் படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விநாயக் சந்திரசேகர் படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், தமிழின் முன்னணி இயக்குநர்கள் இணையான புஷ்கர் - காயத்ரி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கதை சொன்னதாகவும் அது எஸ்கேவுக்குப் பிடிக்க முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

ஓரம் போ, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களால் கவனிக்கப்பட்ட புஷ்கர் - காயத்ரி சுழல் தொடருக்கு கதை எழுதி பெரிதாகப் பாராட்டுகளைப் பெற்றனர்.

இவர்களுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ள தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

summary

actor sivakarthikeyan may be join director pushkar kayathri film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.