முகப்பு
செய்திகள்

100 நாடுகளில் வெளியாகும் கூலி?

நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

Updated On : 5 ஜூலை, 2025 at 5:17 PM
கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த்
பகிர்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம் சுமார் 100 நாடுகளின் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படத்தை, பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியான நாள் முதலே, அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் “கூலி” எனப் பெயரிப்பட்ட இந்தத் திரைப்படத்தில், பிரபல நடிகர்களான நாகார்ஜுனா, ஆமிர்கான், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கூலி திரைப்படத்தை சர்வதேச அளவில் விநியோகிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தை 40 நாடுகளிலும், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான தேவரா திரைப்படத்தை 90-க்கும் அதிகமான நாடுகளிலும் அந்நிறுவனம் வெளியிட்டது.

இதனால், ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கூலி திரைப்படத்தை 100-க்கும் அதிகமான நாடுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Reports suggest that the film 'Coolie', which is being made in collaboration with Superstar Rajinikanth and director Lokesh Kanagaraj, will be released in theaters in about 100 countries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.