ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் சரவெடி: வார் 2 படத்தின் டிரைலர்!
ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள வார் 2 படத்தின் டிரைலர்...
நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள வார் - 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 150 நாள்களாக இதன் படப்பிடிப்பு 5 நாடுகளில் நடைபெற்றதாகப் படக்குழு தெரிவித்திருந்தது.
யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வார் - 2 படம் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.
வார் படத்தின் முதல் பாகம் 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வருகிற ஆக. 14 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
”ஹிருத்திக் ரோஷன் சார் உடன் படப்பிடிப்பில் இருந்த நாள்கள் எல்லாம் சரவெடிதான். அவரது ஆற்றலை நான் எப்போதும் வியக்கும் ஒன்று. வார் 2 பயணத்தில் நான் அவரிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டேன்” என ஜூனியர் என்டிஆர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
The much-awaited trailer of Yash Raj Films' action thriller War 2, starring Hrithik Roshan, Jr NTR, and Kiara Advani, was unveiled on Friday, promising an action-packed cinematic experience.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.