செய்திகள்

வெளியீட்டுக்குத் தயாராகும் ஜீனி, கராத்தே பாபு!

கராத்தே பாபு, ஜீனி படங்களின் வெளியீடு குறித்து....

DIN

நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகும் கராத்தே பாபு, ஜீனி படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதற்கான முயற்சியில் உள்ளார். இதற்காக, இருவரும் அடிக்கடி அறிக்கை வெளியிட்டு தங்கள் தரப்பு நியாயங்களைக் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, ரவி மோகன் ஜீனி, கராத்தே பாபு, பராசக்தி ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார். இதில், ஜீனி படப்படிப்பு முழுமையாக நிறைவடைந்து விஎஃப்எக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கராத்தே பாபு படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதாகவும் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

கராத்தே பாபுவின் முக்கியமான பகுதிகளுக்காகத் தன் உடல் எடையை 12 கிலோ வரை குறைப்பதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஜீனி, கராத்தே பாபு ஆகிய திரைப்படங்கள் இந்தாண்டே திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT