தக் லைஃப்: சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து...
கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் உருவாகியுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி என முக்கியமான நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் நிலையில் முன்பதிவுகளில் அசத்தி வருகிறது.
மொழி குறித்து கமல் பேசியது கர்நாடகத்தில் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தக் லைஃப் படம் அங்கு வெளியாகாது எனக் கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பினாலும் தமிழகத்தில் நடிகர் கமலுக்கு ஆதரவு பெருகியுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு இந்தப் படத்துக்கு நாளை (ஜூன்.5) ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இதன்படி நாளை காலை 9 மணிக்கு தக் லைஃப் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.