FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களுக்கு இசையமைத்த 90ஸ் ஃபேவரைட் தேவா!

1990களில் ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களுக்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்தது பற்றி...

39 வினாடிகள் முன்பு
இசையமைப்பாளர் தேவா - ENS
பகிர்:

90களில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் வெற்றிப் படங்களுக்கு தேவா இசையமைத்திருந்தார்.

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவா மாரடைப்பால் காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இசையுலகில் மிகவும் பிரபலமான தேவாவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

மனசுக்கேத்த மகராஜா என்ற திரைப்படத்தின் மூலம், 1986 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தாலும் 1990ல் வெளிவந்த பிரசாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலமாக பிரபலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400 -க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா.

கானா பாடல்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி அவரது குரலில் கானா பாடல்கள் வெற்றிக்கொடி கட்டி பறந்தன. 90ஸ் கிட்ஸ்களுக்கு தேவா பாடல்கள்தான் பிரபலம்.

1990 களில் ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களுக்கு இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளராக இருந்துள்ளார்.

ரஜினியின் மிகப்பெரும் வெற்றி 'மாஸ்' படங்களான பாட்ஷா, அண்ணாமலை படத்துக்கு இசையமைத்தவர். கிட்டத்தட்ட 90களில் இருந்து இன்று வரை பிரபலமாக இருக்கும் ரஜினியின் டைட்டில் கார்டுக்கு இசையமைத்தவர் தேவாதான்.

தேவா இசையில் வெளிவந்த கமல் ஹாசனின் அவ்வை சண்முகி படம் வெற்றிப்படமாக அமைந்தது. பம்மல் கே சம்மந்தம், பஞ்சதந்திரம் படங்களுக்கும் தேவாதான் இசை.

நடிகர் விஜய்யின் 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா. ரசிகன், விஷ்ணு, மாண்புமிகு மாணவன், ஒன்ஸ்மோர், ப்ரியமுடன், நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா, குஷி, பகவதி ஆகிய படங்கள்.

அதேபோல அஜித்தின் வெற்றி படங்களான ஆசை, காதல் கோட்டை, நேருக்கு நேர், காதல் மன்னன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், தொடரும், வாலி ஆகிய படங்களுக்கு இசை தேவா.

90களில் முக்கிய நாடிகளின் படங்களில் எல்லாம் தேவா இசையும் அவரது குரலும் இருக்கும்.

அதேபோல 90களில் பிறந்தவர்களின் பிடித்த இசையமைப்பாளர் தேவா என்பதும் மறுப்பதற்கில்லை. இன்றும் அவரது கானா பாடல்களுக்காக அவரது இசை நிகழ்ச்சிகளுக்கு இளைஞர்கள் படையெடுக்கிறார்கள்.

மறைந்தாலும் இசையாலும் அவரது பாடல்களாலும் என்றும் அவர் நினைவுகூரப்படுவார்.

summary

90s favorite Deva; composed music for films starring Rajini, Kamal, Ajith, and Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments