ஆர்யா - 36 படம் அறிவிப்பு!
ஆர்யாவின் 36-வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது....
நடிகர் ஆர்யா நடிக்கும் அவரது 36-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் ஆர்யா மிஸ்டர் எக்ஸ் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து சார்பட்டா இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், ஆர்யாவின் 36-வது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்தை ரன் பேபி ரன் படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.
எம்புரான் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய முரளி கோபி இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அக்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார். படத்தின் பெயர் நாளை மறுநாள் (ஜூன் 9) மாலை 5 மணிக்கு டீசருடன் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: வாடிவாசல் கைவிடப்படுகிறதா? தயாரிப்பாளர் பதில்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.