லோகேஷ் உடனான படம் எப்போது ஆரம்பம்? அமீர் கான் பதில்!
லோகேஷ் கனகராஜ் - அமீர் கான் படம் குறித்து...
நடிகர் அமீர் கான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த்தை நாயகனாக வைத்து கூலி படத்தை உருவாக்கி வருகிறார். இதில், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் அமீர் கான் நடித்துள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து, இந்தாண்டு டிசம்பர் மாதம் கைதி - 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அண்மையில் நேர்காணலில் பேசிய நடிகர் அமீர் கான், “நானும் லோகேஷ் கனகராஜும் ஒரு படத்தில் பணியாற்றவுள்ளோம். இது மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் சூப்பர் ஹீரோ பாணி படமாக இருக்கும். அடுத்தாண்டு இறுதியில் இதற்கான பணிகள் துவங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
அமீர் கான் குறிப்பிட்ட சூப்பர் ஹீரோ கதை நடிகர் சூர்யாவுக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன, ‘இரும்பு கை மாயாவி’யாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் எப்போது துவங்கும் என்கிற கேள்விக்கு, ‘2026 செப்டம்பர் மாதம் படத்தின் பணிகள் துவங்கும்’ என அமீர் கான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் தமிழ் டிரைலர்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.