3 பிஎச்கே படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த்
3 பிஎச்கே படம் குறித்து சித்தார்த்...
நடிகர் சித்தார்த் 3 பிஎச்கே படம் குறித்து பேசியுள்ளார்.
சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
இதனைத் தொடர்ந்து, இவரது 40-வது படமாக '3 பிஎச்கே' படத்தில் நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Advertisement
Advertisement
இப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், படம்குறித்து பேசிய சித்தார்த், “இயக்குநர் ஸ்ரீ கணேஷ் 3 பிஎச்கே படத்தின் கதையைச் சொன்னபோதே மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தின் அறிமுக விடியோவிலேயே வீட்டை ஒரு கதாபாத்திரம்போல் காட்சிப்படுத்தியிருப்பார். வீடு என்பது பலரின் கனவு. வாடகை வீட்டில் இருந்தாலே பல கேள்விகள் வரும். அப்படி, ஒரு குடும்பம் சொந்தவீடு கனவை நோக்கிச் செல்வதே இப்படம். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் நான் சொந்த வீடு வாங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சிம்பு - வெற்றி மாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது?