ரசிகர்களின் அன்பு பொறுப்பைக் கொடுத்திருக்கிறது: நடிகர் முத்துக்குமார்
நடிகர் முத்துக்குமார் பகிர்ந்தவை...
டோரதியில் நடித்ததற்காகத் தனக்குக் கிடைத்து பாராட்டுகள் குறித்து நடிகர் முத்துக்குமார் பேசியுள்ளார்.
ஒரு நடிகருக்கு கிடைக்கும் உண்மையான விருதுகள் ரசிகர்களின் பாராட்டுகள் தான். கதாநாயகனோ வில்லனோ அல்லது குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது ரசிகர்களின் பாராட்டுக்கள் தான். அந்த வகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் முத்துக்குமார் சமீபத்தில் வெளியான 'டோரதி' திரைப்படத்தில் தன் கதாபாத்திரம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளார்.
படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் தனக்குக் கிடைத்து வரும் அன்பு குறித்து முத்துக்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “நடிகர்கள் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பை ரசிகர்கள் தருவார்கள். ‘டோரதி’ படத்திற்காக எனக்குக் கிடைத்து வரும் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
Advertisement
இப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கும் நன்றி. ‘டோரதி’ படப்பிடிப்பின் போதே, கார்த்திக் சுப்புராஜிடம், ‘உங்களுடைய பத்து படங்களிலேயே இந்தப் படம்தான் சிறந்த படமாக இருக்கும்’ என்று கூறினேன்.
ஆரம்பத்தில், இப்படத்தில் சகோதரர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத்தான் என்னைத் தேர்வு செய்திருந்தார்கள். ஆனால், ‘விசில் வீரய்யா’ கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டபடியே அந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது.
விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன. இந்தக் கதாபாத்திரத்திற்காக என் தோற்றத்தை மாற்றிய மும்பையைச் சேர்ந்த மேக்கப் கலைஞர்கள் உட்பட, எனது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுத்தவரும் அன்பு பொறுப்பையும், ரசிகர்களை திருப்திப்படுத்தும் கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்துள்ளது" என்றார்.
கூத்துப் பட்டறையுடனான தனது தொடர்பின் மூலம் நாடகத் துறையில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொண்ட முத்துக்குமார், பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தன்னை முழுமையாகப் பொருத்திக்கொள்ளும் திறமையான நடிகராகத் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்தி வருகிறார். ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த தனிகா கதாபாத்திரம் அவருக்குப் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜகமே தந்திரம்’, 'தாய் கிழவி' உள்ளிட்ட திரைப்படங்களிலும், 'காட்டான்' இணையத்தொடரிலும் அவர் தனது நடிப்பிற்காக பாராட்டப்பட்டார்.
தற்போது, ‘சார்பட்டா 2’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘சேயோன்’, அருள்நிதியின் 'டிமாண்டி காலனி2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Actor Muthukumar has spoken about the appreciation he received for his performance in Dorothy.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.