சிம்பு, வெற்றி மாறன் 
செய்திகள்

சிம்பு - வெற்றி மாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

சிம்பு - வெற்றி மாறன் படம் குறித்து...

DIN

இயக்குநர் வெற்றி மாறன் - சிம்பு இணையும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை 1 & 2 படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கான அறிவிப்புகளும் முறையாக வெளியானதுடன் ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் விஎஃப் எக்ஸ் பணிகள் முடியாததால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார்.

நிலைமை இப்படியிருக்க, இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னையைப் பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் இதில் நாயகனாக நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், சிம்பு - வெற்றி மாறன் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 16 ஆம் தேதி சென்னை எண்ணூரில் துவங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் முதலில் சிம்புவுக்காக எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!

SCROLL FOR NEXT