இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
பிரபல இந்திய இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் இயக்குநர் அட்லீ.
கடந்த 2023-ம் ஆண்டு அட்லீ - பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஆகியோரது கூட்டணியில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம், ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
Advertisement
Advertisement
வெறும் 5 படங்களிலேயே மிகப் பெரிய உச்சத்தை அடைந்துள்ள இயக்குநர் அட்லீயின் விருதுகளில், தற்போது புதியதாக ஒரு பட்டமும் இணைந்துள்ளது.
இந்நிலையில், இயக்குநர் அட்லீக்கு, அவர் படித்த சத்யபாமா பல்கலைக்கழகம், இன்று (ஜூன் 14) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
முன்னதாக, இயக்குநர் அட்லீ, பிரபல நடிகர் அல்லு அர்ஜூனின் 22 வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் புதிய படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாசில் ஜோசப் இயக்கும் சூப்பர் ஹீரோ கதையில் அல்லு அர்ஜுன்?