டிரெண்டிங்கில் மிஷ்கின் பாடிய பாடல்!
மிஷ்கின் பாடிய பாடல் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது...
லவ் மேரேஜ் படத்திற்காக இயக்குநர் மிஷ்கின் பாடிய பாடல் கவனம் பெற்று வருகிறது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கிய படத்திற்கு லவ் மேரேஜ் எனப் பெயரிட்டுள்ளனர்.
படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார். இதில் சுஸ்மிதா பட், மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்திற்காக மோகன் ராஜன் எழுதி, இயக்குநர் மிஷ்கின் பாடிய, ’எடுடா பாட்டல’ பாடல் இரண்டு நாள்களுக்கு முன் வெளியானது. ஆரம்பத்தில் சாதாரண குத்துப்பாடல் போல் இருந்ததால் பெரிதாகக் கவனம் பெறாமல் இருந்தது.
ஆனால், இன்ஸ்டாகிராமில் இப்பாடலில் இடம்பெற்ற, “மேரேஜுக்கு பொன்னு தேடி டேமேஜான பீஸ்... மேட்ரிமோனி நம்பரெல்லாம் கறந்துச்சு என் காசு” வரிகள் திருமணமாகாத ஆண்களிடம் வரவேற்பைப் பெற்றதால் பலரும் ரீல்ஸ் வீடியோவாக மாற்றி வருகின்றனர். இதனால், பாடல் கவனம் பெற்று வருகிறது.