தமிழில் பைரதி ரணகல்!
ஓடிடியில் பைரதி ரணகல் தமிழ் மொழியில் வெளியாகியுள்ளது...
நடிகர் சிவராஜ்குமார் நடித்த பைரதி ரணகல் திரைப்படம் தமிழ், மலையாள மொழிகளுக்காக பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கீதா பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரிப்பில், இயக்குநர் நாரதன் இயக்கத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற, ஆக்சன் அதிரடி திரைப்படமான “பைரதி ரணகல்” படம், இப்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கன்னடத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் முன்கதையாக உருவான படம்தான் “பைரதி ரணகல்”. மஃப்டி படத்தில், பைரதி ரணகல் எனும் டான் கதாப்பத்திரத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவாராஜ்குமார் நடித்திருந்தார். இந்தக் கதாப்பத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அந்த கதாப்பாத்திரத்தின் முன் கதையை மையமாக வைத்து உருவான படம்தான் “பைரதி ரணகல்”.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: தாமதமாக வெளியான சப்தம்!
ஒரு சாதாரண வழக்கறிஞராக இருந்த பைரதி ரணகல், எப்படி நாடே திரும்பிப் பார்க்கும் டானாக மாறுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. அதிரடி ஆக்சன் படமாக, கமர்ஷியல் அம்சங்களுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது.
நடிகர் சிவராஜ்குமார், முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ராகுல் போஸ், ருக்மணி வசந்த், அவினாஷ், சாயா சிங், தேவராஜ், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.