முகப்பு
செய்திகள்

பிரபாஸுக்கு ஜோடியாகும் இளம் பிரபலம்!

பிரபாஸ் படம் குறித்து...

Updated On : 2 மார்ச் 2025, 4:02 pm IST
பகிர்:

நடிகர் பிரபாஸின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி, சலார் படங்களின் பிரம்மாண்ட வெற்றியால் இந்தியளவில் முன்னணி நடிகராக பிரபாஸ் மாறியுள்ளார். இவர் நடித்த கல்கி திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

தற்போது, ராஜா சாப் என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஃபேண்டசி கலந்து திகில் படமாக இது தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இப்படத்திற்குப் பின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பார் என தெரிகிறது. ஆனால், அதேநேரம் ஹனுமன் படத்தை இயக்கிய இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கத்திலும் பிரபாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், அண்மையில் பிரபாஸ் - பிரஷாந்த் வர்மா படத்தின் போட்டோஷூட் நடைபெற்றதாகவும் அதில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாக்யஸ்ரீ போர்ஸ்

இளம் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் துல்கர் சல்மானுடன் காந்தா படத்தில் வருகிறார். தொடர்ந்து, சூர்யா - வெங்கட் அட்லூரி படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.