முகப்பு
செய்திகள்

மென்டல் மனதில் படத்தின் சிறப்பு போஸ்டர்!

மென்டல் மனதில் படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்.

Updated On : 5 மார்ச் 2025, 5:12 pm IST
பகிர்:

செல்வராகவனின் பிறந்த நாளை முன்னிட்டு மென்டல் மனதில் படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு மென்டல் மனதில் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தினை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைக்கவும் செய்கிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்று(மார்ச். 5) இயக்குநர் செல்வராகவனின் பிறந்த நாளை முன்னிட்டு, மெண்டல் மனதில் படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளது.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு இசையமைத்த ஜி. வி. பிரகாஷ், இப்படத்திலும் இணைந்துள்ளார்.

கடைசியாக இயக்குநர் செல்வராகவன் 2022இல் நானே வருவேன் படத்தினை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments