கிஸ் கிஸ் கிஸ்ஸிக் போஸ்டர்.  
செய்திகள்

முத்தத்தினால் வரும் பிரச்னை..!கிஸ் கிஸ் கிஸ்ஸிக் டிரைலர்!

தெலுங்கு நடிகர் சுஷாந்த் நடிப்பில் உருவான கிஸ் கிஸ் கிஸ்ஸிக் பட டிரைலர்...

DIN

தெலுங்கு நடிகர் சுஷாந்த் நடிப்பில் உருவான கிஸ் கிஸ் கிஸ்ஸிக் பட டிரைலர் வெளியாகியுள்ளது.

விதி ஆச்சார்யா தயாரிப்பில் சிவ் ஹரே இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் கிஸ் கிஸ் கிஸ்ஸிக். புஷ்பா 2 பாடல் வரிகளில் இருந்து இந்தப் படத்தின் தலைப்பை வைத்துள்ளார்கள்.

நாயகன் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்தால் அந்தப் பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் திருமணம் ஆகிவிடும். அதனால் நாயகன் சந்திக்கும் பிரச்னைகளை நகைச்சுவை கலந்து படமாக்கியுள்ளார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை வழங்குகிறது. இந்தப் படத்தில் ஜான்யா ஜோஷி, விதி நடித்துள்ளார்கள்.

நிதின் நிட்ஸ் அரோரா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் வரும் மார்ச்.21ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவிலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் அதிர்ச்சித் தகவல்!

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி சொத்துகள் முடக்கம்!

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் 35 பேர் கைது

SCROLL FOR NEXT