பாராட்டுகளைப் பெறும் பொன்மேன்!
ஓடிடியில் கவனம்பெற்ற பொன்மேன்...
நடிகர் பாசில் ஜோசஃப் நடித்த பொன்மேன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இயக்குநர் ஜோதீஸ் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் பாசில் ஜோசஃப், லிஜோமோல், சஜின் கோபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான படம் பொன்மேன். (பொன்மேன் என்றால் தங்க மனிதன் என்பதைக் குறிக்கிறது)
தங்கத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தில் பொன் எந்த அளவிற்கு மனிதர்களின் மோசமான குணங்களை வெளியே கொண்டு வருகிறது என்பதை சிறப்பாக எழுதியிருந்தனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கூலி ஓடிடி தொகை இவ்வளவா?
இப்படம், மார்ச் 14 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தைக் கொண்டாடி வருவதுடன் பாசில் ஜோசஃப்பின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.
ரூ. 3 கோடி பட்ஜெட்டில் உருவான பொன்மேன் திரையரங்குகளில் ரூ. 10 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.