FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வீர தீர சூரன் டிரைலர் தேதி!

வீர தீர சூரன் டிரைலர் குறித்து...

Updated On : 17 மார்ச் 2025, 12:07 pm IST
பகிர்:

வீர தீர சூரன் திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வீர தீர சூரன் படம் உருவாகியுள்ளது.

தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான 2 பாடல்கள், டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்தை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

படத்தைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் கமர்ஷியல் கல்ட் கிளாசிக்காக இப்படம் மாறும் என நம்பிக்கையாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வீர தீர சூரன் படத்தின் டிரைலர் மற்றும் இதர பாடல்கள் மார்ச் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments