செய்திகள்

திட்டமிட்டபடி கூலி படப்பிடிப்பை முடித்த லோகேஷ் கனகராஜ்!

கூலி படப்பிடிப்பு குறித்து...

DIN

கூலி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்துள்ளது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

செளபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதையும் படிக்க: டிராகன் ஓடிடி தேதி!

இந்த எதிர்பார்ப்புக்கிடையே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் படத்தின் மேக்கிங் விடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

கூலி திரைப்படம் ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் முந்தைய படங்களான மாஸ்டர், விக்ரம், லியோ என பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பைத் திட்டமிட்டபடி முடித்திருந்தார்.

அதேபோல், கடந்தாண்டு ஜூலை மாதம் துவங்கிய கூலி படத்தின் படப்பிடிப்பையும் தற்போது முடித்துக்கொடுத்துள்ளார். தொடர்ந்து, கைதி - 2 படத்திற்கான வேலைகளையும் லோகேஷ் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும்! முதல்வர் வாக்குறுதி!

மகளிர் கணக்கில் உரிமைத் தொகை ரூ. 5,000 வரவு! முதல்வர் அறிவிப்பு!

தேசிய பேரிடா் மீட்பு படை தளத்தில் நாய் பயிற்சி பள்ளி நிறைவு அணிவகுப்பு

செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கு ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

கீழப்பாவூரில் திமுக பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT