எம்புரான் - சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்!
எம்புரான் படம் குறித்து...
Updated On : 19 மார்ச், 2025 at 10:29 AM
எம்புரான் திரைப்படத்தில் பிரபல நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமென்பதால் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துள்ளது.
Advertisement
Updated On : 19 மார்ச், 2025 at 10:56 AM
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழுநீள ஆக்சன் திரைப்படமாக உருவான இப்படத்தில் சஞ்சய் நடித்துள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.